Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விறகு சேகரிக்க சென்ற வாலிபர்கள்…. காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானை வாலிபர்களை துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கும்பார்கோட்டை கிராமத்திற்குள் கடந்த சில நாட்களாக காட்டு யானை புகுந்து அட்டகாசம் செய்கிறது. இந்த காட்டு யானை அவ்வபோது பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் விறகு சேகரிப்பதற்காக அந்த கிராமத்தில் வசிக்கும் வாலிபர்கள் வனப்பகுதிக்கு சென்றனர்.

அப்போது காட்டு யானை வாலிபர்களை ஆக்ரோஷமாக துரத்தி சென்றது. இதனை அடுத்து வாலிபர்கள் அங்கிருந்து பெரிய பாறையின் மீது ஏறி உயிர் தப்பினர். பின்னர் காட்டு யானை சென்றவுடன் வாலிபர்கள் கிராமத்திற்கு திரும்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |