லத்தி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக்காட்சியில் நடிக்கும் பொழுது தமிழ் நடிகரான விஷாலுக்கு ஏற்பட்ட எலும்பு முறிவினால் அவர் அதனை மாவுக்கட்டு மூலம் குணப்படுத்துவதற்காக கேரளாவுக்கு சென்றுள்ளார்.
தமிழ் திரையுலகின்
நடிகரான விஷால் வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து லத்தி திரைப்படத்தில் விஷால் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் லத்தி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக்காட்சி ஒன்றில் நடிக்கும்போது விஷாலுக்கு எதிர்பாராதவிதமாக எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட எலும்பு முறிவை குணப்படுத்துவதற்காக நடிகர் விஷால் கேரளாவுக்கு சென்றுள்ளார்.