Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தல்… காரைக்குடி அருகே வாக்குச்சாவடி மையத்தில்… கார்த்தி சிதம்பரம் எம்.பி வாக்குப்பதிவு..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வாக்குச்சாவடி மையத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி குடும்பத்தினருடன் வந்து வாக்குப்பதிவு செய்தார்.

நேற்று சட்டமன்ற தேர்தல் தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் ஏராளமான வாக்காளர்கள் அந்தந்த வாக்குச் சாவடி மையங்களுக்கு தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் நடிகர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.

இதில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே லட்சுமி ஆச்சி அருணாசலம் செட்டியார் நடுநிலைபள்ளி உள்ளது. இந்த பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குச்சாவடி மையத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி நேற்று தனது குடும்பத்தினருடன் வந்து ஜனநாயக கடமையான வாக்கை பதிவு செய்தார்.

Categories

Tech |