Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விறுவிறுவென்று ஏறிய முதியவர்…! பதற்றமான எழும்பூர் ரயில் நிலையம்… பின்னர் ஏற்பட்ட பரபரப்பு …!!

சென்னையில் எழும்பூர் ரயில் நிலைய கட்டடத்தில் மாடியில் இருந்து முதியவர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வளாகத்தில் டிக்கெட் கவுண்டர் அமைந்திருக்கும் கட்டடத்தின் மாடியில் மீது முதியவர் ஒருவர் வேகமாக ஏறி கொண்டிருந்தார். இதை பார்த்த பயணிகள் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மாடியின் உச்சிக்கு சென்ற அவர் தான் வைத்திருந்த தடியை கீழே வீசிவிட்டு, பின்னர் திடீரென கீழே குதித்தார்.

இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார். அவரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் அவர் யார் ? மரணத்திற்கான காரணம் என்ன ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Categories

Tech |