ரஷ்யா நாட்டில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி உலகில் முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வைரஸின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் தற்போது இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் உலக நாடுகள் முழுவதிலும் மீண்டும் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் உலக நாடுகள் முழுவதும் உள்ள மக்களுக்கு தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து கொரோனா வைரஸ் மனிதர்களுக்குமட்டும் இல்லாமல் வீட்டில் வளர்க்கும் நாய், பூனை, மற்றும் குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்கும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் ரஷ்யா முதன் முதலில் உலகின் விலங்குகளுக்கான கார்னிவாக்- கோவ் என்ற முதல் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்தத் தடுப்பூசி விலங்குகளின் ஆரோக்கியத்திற்க்கு உதவுவதாக மத்திய ஆணையம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ரஷ்ய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளில் நாய்கள், பூனைகள், ஆர்க்டிக் நரிகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தி பரிசோதிக்கப்பட்டதாக தெரிவித்தார். அந்தப் பரிசோதனையில் தடுப்பூசி பாதிப்பு இல்லாதது என்பதை உறுதி செய்ததோடு அது விலங்குகளுக்கு அதிக நோய் எதிர்ப்பு திறனை அளிக்கிறது என்பதை அவர் தெரிவித்தார் . மேலும் அமெரிக்கா, கனடா ,ஆஸ்திரேலியா, கிரீஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில்உள்ள மருந்து நிறுவனங்கள் கார்னிவாக்-கோவ் தடுப்பூசியை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதனால் இந்த மாதம் இறுதிக்குள் தடுப்பூசிகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.