தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இது மனிதர்களை மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் வண்டலூரில் 9 சிங்கங்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து அந்த சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டன. இதன் எதிரொலியாக முதுமலை வளர்ப்பு முகாமில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி முகாமில் யானை பாகன்கள், உதவியாளர்கள், வனத்துறையினருக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம். வனவிலங்குகளுக்கு இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே தகவல் அளிக்கவேண்டும். யானைகளுக்கு உணவு வழங்கும் நேரம் இரண்டு மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.