Categories
உலக செய்திகள்

விலங்குகள் மூலம் பரவிய கொரோனா… WHO ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

விலங்குகள் மூலமாக மனிதர்களுக்கு கொரோணா பரவியிருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக இருந்த நிலையில், உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் பெரும்பாலான நாடுகளில் கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் பாதிப்பை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அதுமட்டுமன்றி கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் விலங்குகள் மூலமாக மனிதர்களுக்கு கொரோணா பரவியிருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. வவ்வால்களில் இருந்து மற்றொரு விலங்கு மூலமாக கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்றும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன.

Categories

Tech |