Categories
மாநில செய்திகள்

விலையுயர்ந்த சைக்கிள்களை குறிவைக்கும் திருடன்…. வெளியான சி.சி.டி.வி காட்சி…. பரபரப்பு….!!!!

சிவகங்கை நகரில் சிறுவர்களின் விலையுயர்ந்த சைக்கிள்களை குறிவைத்து 60 வயது நபர் திருடி சென்றுள்ளார். இந்த திருடன் சைக்கிளை திருடிசெல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களை தொல்லை செய்து சிறிவர்கள் விலையுயர்ந்த சைக்கிள்களை, ஆசையுடன் வாங்குகின்றனர். புது வகையான மாடல்களில் வெளிவரும் இந்த சைக்கிள்களை வாங்கி ஓட்டிச் செல்வதில் சிறுவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி. 10 ஆயிரம் முதல் 1 லட்ச ரூபாய் ரூபாய் வரையிலான விலையில் விற்கப்படும் இந்த சைக்கிள்களை வாங்கும் சிறுவர்கள் தினசரி டியூசன் மற்றும்  கடைத்தெருகளுக்கு செல்வதற்கு சந்தோசமாக இவற்றை ஓட்டிச் செல்லுகின்றனர்.

இதில் டியூசன் சென்டருக்கு போகும் மாணவர்கள் சைக்கிள்களை பூட்டிவைத்துவிட்டு செல்கின்றனர். இருப்பினும் சில இடங்களில் ட்யூஷன் முடிந்து வந்து பார்த்தால் அந்த இடத்தில் ஆசையாக வாங்கிய அவர்களின் விலையுயர்ந்த சைக்கிள் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைகின்றனர். இதையடுத்து தங்களது வீட்டில் சைக்கிள் திருடு போய் விட்ட விஷயத்தை சிறுவர்கள் சொல்லும்போது பெற்றோர்கள் அவர்களை கடுமையாக கண்டிக்கிறார்கள். இதன் காரணமாக சிறுவர்கள் மனமுடைந்து தங்களது படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் சோர்வடைந்து விடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் போக்குவரத்து நெரிசல் மிக்க மதுரை முக்கு பகுதியில் போலீஸ் பீட் அருகிலேயே இருக்கும் ஒரு டியூஷன் சென்டரில் 11ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர் தன் புதிய சைக்கிளை வெளியே நிறுத்தி சென்றுள்ளார்.

இந்நிலையில் அந்த இடத்தை நோட்டமிட்டு வந்த 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு நபர் அந்த சைக்கிளை எடுத்து செல்கிறார். இக்காட்சி அங்கிருந்த போலீஸ் பீட் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. இந்த நபர் இது போன்று மேலும் சில டியூஷன் சென்டர் வாயில்களில் அடிக்கடி வந்து நிற்பதாகவும், சில மாணவர்களின் புது சைக்கிள் காணாமல் போயுள்ளதாகவும் இவரின் புகைப்படத்தை பார்த்த சில மாணவர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே காவல் துறை இந்த நூதன திருட்டில் உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட சைக்கிள் திருடனை கைது செய்து மாணவர்களிடத்தில் நிலவும் அச்சத்தை போக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Categories

Tech |