ஜெர்மனியில் விலைமதிப்பற்ற பல பொருட்கள் திருடப்பட்ட வழக்கில் கொள்ளையர் தப்பியோடியுள்ளார்.
ஜெர்மனியில் இருக்கும் Dresden என்ற நகரில் அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் கடந்த 2019 ஆம் வருடம் வரலாற்றுப் பெருமை வாய்ந்த Dresden என்ற வெள்ளை வைரம் உள்ளிட்ட பல விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளன. மேலும் அரேபியாவைச் சேர்ந்த Remmo clan என்ற கொள்ளை கும்பல் இதில் இருக்கக்கூடும் என்று ஜெர்மன் அதிகாரிகள் நம்புவதாக கூறியுள்ளனர். மேலும் இந்த அரேபியர்கள் பெர்லினில் உள்ள Neukooln என்ற பகுதியில் வசித்து வருகிறார்கள்.
ஆகவே 2020 ஆம் வருடம் நவம்பர் மாதத்தில் இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ஜெர்மனியை சேர்ந்த சுமார் 1600 போலீஸ் அதிகாரிகள் Neukooln பகுதியில் சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் இச்சோதனையில் சந்தேகத்தின் அடிப்படையில் மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய இரட்டையர்கள் அப்துல் மற்றும் அவரின் சகோதரர் ஆகிய இருவரும் தப்பியுள்ளனர். இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் அப்துலின் சகோதரர் காவல்துறையினரிடம் மாட்டிக் கொண்டுள்ளார். ஆனால் அப்துல் தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் Neukooln பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அப்துல் இருப்பதாக நேற்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சுற்றிவளைத்துள்ளனர். ஆனால் அதற்குள் அப்துல் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதனிடையே திருடப்பட்ட பொருட்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு விற்பனையாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் பொருள் கிடைக்குமா? என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.