தொடர்ந்து உயர்ந்து வரும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் நுதன முறையில் ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இந்த ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இதில் கலந்து கொண்டவர்கள் அப்பகுதியில் உள்ள மாதா கோவிலில் இருந்து கியாஸ் சிலிண்டர் மற்றும் விறகு ஆகியவை பெண்கள் தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக சென்று சமையில் சிலிண்டர் விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும் என நுதன முறையில் போராடியுள்ளனர்.
இதனையடுத்து கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்கள் ஏற்கனவே அவதியடைந்து வரும் நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது வேதனையளிக்கிறது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு ராசிபுரம் ஒன்றிய செயலாளர் ராணி தலைமை தாங்கியுள்ளார். மேலும் பொருளாளர் பழனியம்மாள், ஒன்றிய நிர்வாகிகளான சரோஜா, சிந்து, மல்லிகா, சரசு, தங்கமணி, ராணி, மணி உள்பட பல்வேறு பெண்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிகொண்ட ஊர்வலம் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.