Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விலையை உடனடியாக குறைக்க வேண்டும்…. காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவகுடி பகுதியில் வைத்து காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் நஜ்முதீன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் கிழக்கு வட்டார துணைத்தலைவர் பக்கிரிசாமி, கிழக்கு வட்டார பொது செயலாளர் சேகர், கட்சியினர், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |