Categories
தேசிய செய்திகள்

“விலைவாசி உயர்வால் தலைவலி”…… மத்திய அரசு எடுத்த முக்கிய நடவடிக்கைகள்…..!!!!

விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பணவீக்கம் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் விலைவாசி உயர்ந்து மக்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. ரிசர்வ் வங்கி அவசர ஆலோசனை நடத்தி ரெப்போ வட்டியை 4.40 சதவீதமாக உயர்த்தியது. ஜூன் மாதமும், அடுத்த கொள்கை கூட்டங்களிலும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விலைவாசி ஏற்றத்தையும் பண வீக்கத்தையும் கட்டுப்படுத்த மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் பற்றி இதில் பார்ப்போம்.

  • பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் குறைத்துள்ளது.
  • ஸ்டில் துறை மற்றும் பிளாஸ்டிக் துறைக்கு தேவையான மூலப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களை இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது
  • சில ஸ்டீல் பொருட்கள் மற்றும் இரும்பு தாதுக்கு ஏற்றுமதி வரி விதித்துள்ளது. இதனால் ஸ்டீல் விலை குறையும்.
  • நடப்பு நிதியாண்டு மற்றும் அடுத்த நிதியாண்டில் இறக்குமதி வரி இல்லாமல் 20 லட்சம் டன் கச்சா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
  • கோதுமை விலையை கட்டுக்குள் வைப்பதாக கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.
  • சக்கரை கையிருப்பை உறுதி செய்ய 100 லட்சம் டன் சர்க்கரை மட்டும் ஏற்றுமதி செய்யலாம் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது.
  • உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது இதனால் 9 கோடி பயனாளர்கள் பயன்பெறுவார்கள்.

Categories

Tech |