புதுக்கோட்டை மாவட்டத்தில் பலாப்பழம் சீசன் தொடங்கியும் உரிய விலை கிடக்காமலையே வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி, நெடுவாசல் மற்றும் கொத்தமங்கலம் ஆகிய பகுதிகளில் தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் பலாப்பழங்கள் விற்பனை நடைபெற்று வருகின்றது. இந்தப் பகுதிகளில் விளையும் பலாப்பழங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு என்பதால் இங்கு விளையும் பழங்கள் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா தொற்று காலமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் பலாப்பழங்கள் விற்பனை சரிந்துள்ளது. இதனையடுத்து பலாப்பழங்கள் ஆங்காங்கே சாலையோர கடைகளில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பலாப் பழத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.