இந்தியாவில் மாருதி சுசுகி விலை உயர்த்தி அதை தொடர்ந்து ஹீரோ நிறுவனம் பைக்குகளின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பார்த்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமல்லாமல் பைக் முதல் கார் வரை அனைத்தின் விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது.
அதன்படி மாருதி சுசுகி கார்கள் விலை உயர்த்தி அதை தொடர்ந்து ஹீரோ நிறுவனம் பைக்குகளின் விலையை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. சுமார் ரூ.2,500 வரை விலை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், மூலப் பொருள்களின் விலையை உயர்த்துவதால் வாகனங்களின் விலை உயர்வை தடுக்க முடியாது என்று விளக்கம் அளித்துள்ளது. மேலும் மறுபுறம் ரூ.3,500 வரை சலுகைகளையும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.