தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பால் விலை மற்றும் மின்கட்டணம் உயர்வு என அடுத்தடுத்து விலை உயர்வு குறித்த அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பாக போராட்டம் நடைபெற்று வருகின்றது. பால் விலை, மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுகவின் போராட்டம் நடத்தப்படுகிறது.
ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது அவர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என முழக்கமிட்டார்.