நாடு முழுதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பொருளாதார இழப்பை சந்தித்தனர். மேலும் தொழில் நிறுவனங்களும் கடும் சரிவை சந்தித்து வந்தன. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் விலை வாசியும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தீப்பெட்டி உற்பத்திக்கு தேவைப்படும் மூலப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல், சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு காரணமாக லாரி வாடகையும் அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தி செலவு சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை உற்பத்தி நிறுத்தம் செய்வது என்று தீப்பெட்டி தொழிலாளர்கள் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.