Categories
தேசிய செய்திகள்

விலை கட்டுக்குள் வந்துடுச்சு…! உங்க இஷ்டப்படி செய்யுங்க…. மத்திய அரசு உத்தரவு…!!

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அனைத்து விதமான வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வெங்காயம் உற்பத்தி குறைந்து, விலை அதிகரித்ததால் கடந்த செப்டம்பர் மாதம் வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. தற்போது விலை ஓரளவு கட்டுக்குள் வந்ததை அடுத்து, வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிக்கைகள் எழுந்தன.

அதன்படி வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி அளிப்பதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Categories

Tech |