விலை குறைவு என நினைத்து நோய்க்கிருமி தாக்கிய சிக்கன் வாங்கி சாப்பிட்ட நூற்றுக்கணக்கானோருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
பிரித்தானியாவில் நோய்க்கிருமி தாக்கிய சிக்கன் தயாரிப்புகளை சாப்பிட்ட நூற்றுக்கணக்கானோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. நோய்க்கிருமிகள் தாக்கிய அந்த சிக்கன்கறி போலந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அவை பிரிட்டன் நாட்டில் சிக்கன் கட்லெட் போன்ற உணவு வகைகளாக தயாரிக்கப்பட்டு பல்பொருள் அங்காடியில் குறைவான விலைக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்தச் சிக்கன் தயாரிப்புகளை சாப்பிட்ட 480 பேருக்கு சால்மோனெல்லா நோய்க்கிருமி தாக்கியுள்ளது.
அந்தச் சிக்கன் தயாரிப்புகள் பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கும் வாங்கிக் கொடுத்துள்ளனர். இதனால் சிக்கன் தயாரிப்புகளை சாப்பிட்டு பாதிக்கப்பட்டவர்களில் 16 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் 44% பேர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து உணவு தரக்கட்டுப்பாடு ஏஜென்சி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் சில சிக்கன் தயாரிப்புகளை திரும்பப் பெறவும் உத்தரவிட்டுள்ளது.