தமிழகத்தில் சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்யும்போது அதற்கு முன்பு ஆவணங்களை சரிபார்க்க எத்தனை வருடங்களுக்கான வில்லங்க விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் நிலவியது. தற்போது சொத்து விற்பனை பதிவில் மோசடி மற்றும் ஆள் மாறாட்டத்தை தடுக்கும் விதமாக பதிவுத்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பதிவுக்கு வரும் சொத்தின் முன் ஆவணங்களை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக தாய் பத்திரத்தின் அசல் பிரதியை சார் பதிவாளர்கள் சரி பார்ப்பதுடன் அதன் குறிப்பிட்ட சில பக்கங்களை ஸ்கேன் செய்து புதிய ஆவணத்துடன் இணைக்க வேண்டும் எனவும் சொத்தில் உண்மை தன்மையை ஆய்வு செய்ய வழக்கமாக 30 வருடங்களுக்கான வில்லங்கச் சான்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் நிலையில் தற்போது 50 முதல் 60 வருடங்களுக்கான வில்லங்க விபரங்களை திரட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனவே பத்திரப்பதிவின்போது எத்தனை வருடங்களுக்கான வில்லங்கச் சான்றுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்கு கால வரையறை நிர்ணயம் செய்ய வேண்டும். இது குறித்து பதிவுத்துறை தலைவரிடம் முறையிடப்பட்டுள்ளதாகவும் எனவே விரைவில் பதிவுத்துறையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.