நடிகர் சோனு சூட் இனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதில்லை முடிவு எடுத்துள்ளார்.
தமிழ், ஹிந்தி ,தெலுங்கு போன்ற பல மொழித் திரைப்படங்களில் வில்லனாக நடித்து மிரட்டியவர் சோனு சூட் . திரைப்படங்களில் மட்டும் தான் வில்லன் ஆனால் நிஜ வாழ்க்கையில் ஹீரோ . கொரோனா ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில் ஏழை மக்களுக்காக இவர் ஏகப்பட்ட உதவிகள் செய்துள்ளார் . தனது சொந்த செலவில் மக்களுக்கு உதவிகள் செய்து உண்மையான கதாநாயகனாக மாறினார் . தற்போது இவரது இமேஜ் மக்கள் மத்தியில் மாறிவிட்டதால் படங்களில் சோனு சூட்க்கு வில்லன் கதாபாத்திரங்கள் கொடுப்பதை இயக்குனர்கள் தவிர்த்து வருகிறார்களாம் .
மேலும் கொரோனா ஊரடங்கிற்க்கு முன்னதாக இவர் வில்லனாக நடித்துவந்த ‘அல்லுடு அதுர்ஷ்’ என்ற படத்தில் முற்றிலுமாக இவரது கதாபாத்திரத்தை மாற்றி விட்டார்களாம் . இதையடுத்து அவருக்காக புதிய கதையும் உருவாக்கியுள்ளார்களாம். இதனால் நடிகர் சோனு சூட் ‘இனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதில்லை’ என முடிவு எடுத்துள்ளார் . இனிவரும் திரைப்படங்களில் பாசிட்டிவான கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.