எலக்ட்ரீசியன் கேதார் என்பவர் தனது கிராமத்திற்கு மின்சாரம் கொண்டு வர வேண்டும் என்பதற்காக பயன்படுத்த முடியாத பொருட்களை வைத்து நீர்மின் நிலையம் அமைத்து சாதனை படைத்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பியான் கிராமத்தை சேர்ந்த கேதார் என்பவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது கிராம மக்களுக்கு மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். மின்சாரம் இல்லாமல் பாசனத்திற்காக விவசாயிகள் நீர் பம்புகளை பயன்படுத்த முடியாமல் இருந்ததை கண்டு அவர் வருத்தமடைந்தார். அதுமட்டுமல்லாமல் கிராம சிறுவர்கள் படிப்பும் மின்வெட்டு காரணமாக தடைபட்டது. 33 வயதான கேதார் தான் 18 ஆண்டுகளாக உழைத்து சேர்த்த பணத்தை முதலீடு செய்ய விரும்பினார். அவர் முதலீடு செய்தது வங்கியிலோ அல்லது வேறு சேமிப்பு திட்டங்களில் அல்ல. புதிய நீர் மின் நிலையத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக…
அதில் முதலீடு செய்ய அவர் கையில் இருந்த இரண்டு லட்சம் ரூபாயை அதில் போட்டார். ஆனாலும் அது பத்தாது என்று உணர்ந்து கொண்டால் தொடர்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்ட கேதார் ஸ்கிராப் பொருட்களிலிருந்து ஒரு டர்பைனை உருவாக்கி அதன் மூலம் கிராம மக்களுக்கு மின்சாரம் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்கான பணியை தொடங்கி ஸ்கிராப் பொருட்களை கொண்டு நீர் மின் நிலையத்தை உருவாக்கினார். தற்போது கேதரின் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு பல மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துள்ளது. அந்த கிராம மக்கள் அவரை கொண்டாடிவருகின்றனர். தொழில்நுட்ப உதவியுடன் நல்ல காரியங்களை செய்ய முடியும் என்பதற்கு இவர் ஒரு சான்றாக விளங்குகின்றார்.