Categories
சினிமா தமிழ் சினிமா

வில்வித்தை பயிற்சியில் பிக்பாஸ் சாக்ஷி அகர்வால்… வெளியான புகைப்படங்கள்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!!

பிக்பாஸ் பிரபலம் சாக்ஷி அகர்வால் வில்வித்தை பயிலும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ‌.

நடிகை சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் . இவர் சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார் . தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காக நடிகை சாக்ஷி அகர்வால் கோவா சென்றுள்ளார் . அங்கு அவர் எடுத்துக்கொண்ட விதவிதமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் கோவாவில் வில்வித்தை பயிற்சி பெற்றுவரும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார் .

அதில் ‘புதிய கலையை பயிற்சி பெற்றுக் கொள்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. இந்த விடுமுறையை வில்வித்தை கற்றுக்கொள்வதில் ஈடுபட்டுள்ளேன்’ என பதிவிட்டுள்ளார். மேலும் இவர் நடிக்கவுள்ள ‘புரவி’ என்ற திரைப்படத்தில் வில்வித்தை சம்பந்தப்பட்ட காட்சிகள் இருப்பதால்தான் இவர் இந்த பயிற்சியை மேற்கொள்வதாக கூறப்படுகிறது. இதையடுத்து இவர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகிவரும் ‘அரண்மனை 3’ படத்திலும் நடித்து வருகிறார் . நடிகர் ஆர்யாவின் ‘டெடி’ மற்றும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’, ‘சின்ட்ரெல்லா’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |