Categories
தேசிய செய்திகள்

விளக்கேற்ற வந்த மனைவியை…. விளக்கால் அடித்து கொன்ற கொடூரன்…. பின்னணி என்ன?…. பரபரப்பு….!!!!

கேரளா ஆலப்புழா கிடங்கம்பரம்பு பகுதியில் வசித்து வந்தவர் நிகிதா(25). இவருக்கும் வர்க்கலாவைச் சேர்ந்த அனீஷ் (35) என்பவருக்கும் சென்ற ஜூலைமாதம் திருமணம் நடந்தது. இதில் நிகிதா ஏற்கனவே திருமணமாகி சிறிது நாட்களிலேயே கணவனை பிரிந்து முறைப்படி விவாகரத்து பெற்றவர் ஆவார். இதற்கிடையில் அனீஷுக்கு சில உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால் தம்பதியினர் திருமணம் முடிந்த உடனே வெளிநாடு சென்று வீடு திரும்பினர். அப்போது அங்கு வைத்து கணவன்-மனைவி இடையே சரியான புரிதல் இல்லாமல் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனிடையில் நிகிதா மீது அனிஷூக்கு சந்தேகம் இருந்துவந்தது. அதாவது அவருக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை அனீஷின் குடும்பத்தினருக்கு அவரது அறைக்குள் இருந்து பலத்த அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதன்பின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நிகிதா ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

அனீஷ் ரத்தக் கறையுடன் இருந்தார். உடனே காவல்துறையினருக்கு தகவல் அளித்து நிகிதாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நிகிதாவின் தலையில் குத்து விளக்கினால் அடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து காவல்துறையினர் அனிஷை கைது செய்தனர். அதன்பின் அனீஷ் காவல்துறையினரிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்போது அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |