பல்வேறு ஊடகங்கள் வாயிலாக விளம்பரத்திற்காக மத்திய அரசு இதுவரை ரூ.911.17 கோடி செலவழித்து உள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. மாநிலங்கள் அவையில் காங்கிரஸ் எம்பி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “2019-2022” ஜூன் வரையிலான நிதியாண்டில் செய்தித்தாள், தொலைக்காட்சி, இணையதளம் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் வாயிலாக மத்திய அரசு இதுவரை ரூ.911.17 கோடி செலவிட்டுள்ளது. இதில் தொலைக்காட்சிகளுக்கு மட்டும் 200 கோடி, செய்தித்தாள்களுக்கு 179.4 கோடி செலவிடப்பட்டுள்ளது.
Categories