உத்திரபிரதேசத்தில் பிரோசாபாத் நகரில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக பல விளம்பர பதாகைகள் அரசின் சார்பில் வைக்கப்பட்டிருந்தது. அந்த விளம்பர போஸ்டர்களில் பிரதமர் மோடி மற்றும் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் சில மர்ம நபர்கள் விளம்பர படங்களில் இருந்த முதல்வரின் படங்களை வேண்டுமென்றே சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாஜக தலைவர் பலரும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
அப்போது மாவட்ட நிர்வாகத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த 3 விளம்பரம் பாதகைகளில் இருந்த முதல்வர் ஆதித்யநாத் படங்களை சிலர் சேதப்படுத்தி நீக்கி உள்ளனர். இந்த சம்பவம் வேண்டும் என்று திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு குற்றம் சாட்டினர். இதில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் சமூக விரோதிகள் இத்தகைய செயல்கள் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் கூறியது, மாவட்ட நிர்வாகம் இந்த விவாகாரம் குறித்து தீவிரமாக விசாரனை நடத்தி வருகின்றனர். எனவே குற்ற செயலில் ஈடுபட்டவர்களை விரைவில் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். மேலும் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.