Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

விளாத்திகுளம் தொகுதியில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் முக்கிய தொழில்களாக உள்ளன. கடற்கரை ஓரத்தில் உள்ள சில கிராம மக்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மகாகவி பாரதியார் பிறந்த எட்டையபுரம் இந்த தொகுதியில் தான் உள்ளது. வாரம் இருமுறை நடைபெறும் எட்டயபுரம் ஆட்டுச் சந்தை தென்மாவட்டங்களில் புகழ்பெற்றதாகும். விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக 4 முறையும், அதிமுக 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

தற்போதே எம்எல்ஏ அதிமுகவின் சின்னப்பன். விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,15,543 ஆகும். விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள விளாத்திகுளம் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலே இல்லை என்பது விவசாயிகளுக்கு பெரும் குறையாகவே உள்ளது, இதனால் 100 நாள் வேலைக்கான ஊதியத்தை பெற கூட நீண்ட தூரம் செல்ல வேண்டி இருப்பதாக மக்கள் வேதனைப்படுகின்றனர்.

இப்பகுதியில் அதிகமாக விளைவிக்கப்படும் மிளகாயை சேமிக்க குளிர்பதன கிடங்கு தேவை என்பது மக்களின் எதிர்பார்ப்பு. கண்மாய்களை முறையாக தூர்வாரி நிலத்தடி நீரை சேமித்து வறட்சி காலங்களில் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கை. பள்ளிக் கல்வி முடித்த பெண்கள் கல்லூரி படிப்பிற்காக வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால் கலை அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி உருவாக்க வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகளை கொண்டுவர வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து அதிமுக வசமுள்ள விளாத்திகுளம் தொகுதியில் மாற்றம் ஏற்படுமா என அறிய மக்கள் காத்திருக்கின்றனர்.

Categories

Tech |