தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சுற்று வட்டாரத்தில் விளை நிலங்களில் மருந்து தெளிக்க நவீன ட்ரோன் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது .
கைத்தெளிப்பான் மூலம் மருந்து தெளிக்க ஏக்கருக்கு 1/4லிட்டர் மருந்து தேவைப்படும். ஆனால் இவ்வகை ட்ரோன்களை வைத்து மருந்து தெளிக்கும் போது 110மில்லி இருந்தாலே போதுமனதாக உள்ளது .இந்த முறையில் மருந்து தெளிக்க ஏக்கருக்கு 700 மட்டுமே செலவாவதாக கூறப்படுகிறது. .உளுந்து ,மக்காச்சோளம் ,கம்பு போன்ற பயிர்களுக்கு இந்த முறையில் மருந்து தெளிக்கும் போது நல்ல முறையில் மகசூல் கிடைப்பதாக கூறிய விவசாயிகள் தமிழக அரசு மானிய விலையில் விவசாயிகளுக்கு ட்ரோன்களை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் .