Categories
மாநில செய்திகள்

விளைநிலங்களை அழித்து விமான நிலையம் கட்ட வேண்டிய அவசியம் என்ன?….. சீமான் எழுப்பிய கேள்வி…..!!!!

சென்னையில் 2 வது சர்வதேச விமான நிலையம் பரந்தூரில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு தேவையான நிலம் விவசாயம் நிலங்களாகவும், குடியிருப்பு பகுதிகளாகவும் இருப்பதால் அங்கு வசிக்கும் கிராம மக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் ஏகனாபுரம் பரந்தூர் நெல்வாய் உள்ளிட்ட கிராமங்களில் பல்வேறு போராட்டங்களையும் பொதுமக்கள் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பரந்தூர் அருகில் உள்ள ஏகானாபுரம் கிராமத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சென்றார். அப்போது போராட்டக் கழகத்தில் இருந்த பொதுமக்களை சந்தித்து பேசினார். நிலம் கையகப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்த பெண்கள் சீமானை பார்த்ததும் கண்ணீருடன் புலம்ப தொடங்கினார்கள்.

அதாவது, “எங்களுக்கு எங்க ஊர் வேணும்பா, சொந்த பூமியை விட்டு நாங்க எங்க போக முடியும். இந்த மண்ணை விட்டு எங்களால் போக முடியாதுப்பா. ஏதாவது செஞ்சு எங்களை காப்பாற்ற்று என்று மூதாட்டிகள் சிலர் கதறி அழுதனர். அதன் பிறகு யாருமே எதிர்பார்க்காதபடி சீமான் காலில் விழுந்து அழ தொடங்கினார்கள். இதனால் சீமான் பதறி போனார். உடனடியாக அவர்களை தூக்கி கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். ஒரு கட்டத்தில் சீமானும் துக்கம் தாங்காமல் அழ தொடங்கினார். அவரை நிர்வாகிகள் தேற்றினார்கள். அதனை தொடர்ந்து போராட்ட கழகத்தில் உள்ள மக்களுக்கு ஆதரவாக தனது கருத்துக்களை சீமான் வெளிப்படுத்தினார். அவர்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதிதாக விமான நிலைய அமைக்க என்ன தேவை வந்துவிட்டது.

ஏற்கனவே உள்ள விமான நிலையத்தில் ஏதாவது பிரச்சனையா? புதிய விமான நிலையம் வேண்டும் என்றா மக்கள் வீதிக்கு வந்து போராடி போராடினார்களா? மக்களின் வாழ்விடங்களையும், விளைநிலங்களையும் அழித்து விமான நிலையம் கட்டுதல் என்ன வளர்ச்சி கிடைத்து விடப்போகிறது. சென்னையில் மழை காலத்தின் போது வெள்ளம் நீர் வழிந்தோடுகிறது, கழிவு நீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது, சாலைகள் சரியல்ல். இதனை போக்க ஏதாவது தொலைநோக்கு திட்டங்களை அரசு கொண்டு வந்ததா?. இது போன்ற திட்டங்களால் சுற்றியுள்ள நில முதலாளிகள் வளர முடியுமே தவிர அடிதட்டு மக்கள் வளர முடியாது. விளைநிலங்களை அழித்து ஒரு விமான நிலையம் அமைய வேண்டுமா? அது தான் வளர்ச்சியா?. ஏற்கனவே சென்னையில் ஒரு விமான நிலையம் இருக்கும்போது, இந்த புதிய நடவடிக்கை அவசியமற்றது. அதனால் தான் மக்கள் புதிய விமான நிலைய வேண்டாம் என்று வீதிக்கு வந்து போராடுகிறார்கள். இங்கு ஆயிரம் கணக்கான ஏக்கர் புறம்போக்கு நிலம் இருப்பதாகவும், மூன்றில் ஒரு பங்கும் தான் மக்கள் நிலங்கள் வருகின்றது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவிக்கிறார். அப்படி என்றால் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் எல்லைக்குள்ளாக மட்டும் உள்ளூர் விமான நிலையத்தை கட்டிக் கொள்ளட்டுமே. எதற்காக 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கேட்கிறீர்கள். இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த துடிப்பதின் அவசியம் என்ன என்று அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

Categories

Tech |