பரளச்சி அருகே விளைநிலத்தில் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
விருதுநகர் மாவட்டம் ராணிசேதுபதி கிராமத்தைச் சேர்ந்த விதவைப் பெண் ஒருவர் நேற்று தனது விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். மாலையில் வீடு திரும்பாத நிலையில் அங்கு சென்று உறவினர்கள் பார்த்த போது பெண்ணின் செருப்பு மட்டுமே கண்டெடுக்கப்பட்டதால் பரளச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது .
பல இடங்களில் தேடப்பட்ட நிலையில் இன்று காலை விளைநிலத்திலேயே கழுத்தறுக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. ஆடை களைந்த நிலையில் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததால் பாலியல் அத்துமீறல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்த போலீசார் கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.