விவசாய பொருட்களை சந்தைப்படுத்துதல் தொடர்பாக விளைபொருள் விற்பனை முகாம் நடைபெற்றுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தாழனூர், புன்னப்பாடி, சர்வந்தங்கள் உள்ளிட்ட கிராமங்களில் விளைபொருட்களை சந்தைகளில் விற்பனை செய்வது தொடர்பாக விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் வட்டார தோட்டக்கலை வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை சார்பில் நடைபெற்றது.
இதை நடத்துவது தொடர்பான ஆலோசனையை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சீனி ராஜ், உதவியக்குனர் கமலி ஆகியோர் வழங்கினர். இதனையடுத்து விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைவித்த பொருட்களை இடைத்தரகர் இன்றி தாங்களே விற்பனை செய்வதற்கும் அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் இந்த முகாமில் தோட்டக்கலைத்துறை மற்றும் வணிகத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.