Categories
தேசிய செய்திகள்

விளையாடப் போவியா… போவியா… 9 வயது மகளை கொடூரமாக தாக்கிய தாய்… கையும் களவுமாக சிக்கிய சம்பவம்…!!!

பெங்களூருவின் ஹெப்பல் பகுதியில் கையில் காயமடைந்த தன்னுடைய 9 வயது மகளை அவருடைய தாயார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அப்போது, சிறுமியின் கையில் தீயினால் ஏற்பட்ட புண்கள் இருப்பதை பார்த்து சந்தேகமடைந்த மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பக்கத்து வீட்டில் சிறுமி விளையாடிக் கொண்டிருப்பதை தாயார் பார்த்திருக்கிறார், இதனால் கடுமையான கோபமடைந்து ஆத்திரத்தில் கட்டையை எடுத்து சிறுமியை அடித்திருக்கிறார். பின்னர் மெழுகுவர்த்தி ஒன்றின் மூலம் சிறுமியின் வலது கையை பொசுக்கியிருக்கிறார். சிறுமி அளித்த வாக்குமூலத்தை அடுத்து அவருடைய தாய் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்களின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர் . பின்னர், அவரை கைது செய்த நிலையில், பிணையில் விடுவித்து விட்டனர்.

Categories

Tech |