போலீஸ்காரரின் மகளிடமே செயினை பறித்துச் சென்ற கோலமாவு வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
சென்னை மாவட்டத்திலுள்ள வடபழனியில் இருக்கும் பக்தவச்சலம் காலனியில் வசித்து வருபவர் தாமோதரன். இவர் மத்திய ரிசர்வ் படை போலீசாக பணியாற்றி வருகின்றார். இவருக்கு அபிராமி என்ற மனைவியும் மற்றும் மூன்று வயதில் ரித்திகா என்ற குழந்தை இருக்கின்றது.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டு வாசலில் ரித்திகா, குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற கோலமாவு வியாபாரி ரித்திகாவிடம் நைசாக பேச்சு கொடுத்து குழந்தை அணிந்திருந்த அரை பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதனால் குழந்தை அழுந்ததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அந்த வியாபாரியை பிடித்து தர்ம அடி கொடுத்து வடபழனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். போலீசார் விசாரணை செய்ததில் அந்த கோலமாவு வியாபாரி குரோம்பேட்டை பகுதியில் உள்ள ராதா நகரை சேர்ந்த மரியான் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து மேலும் அவரிடம் விசாரணை செய்து வருகின்றார்கள்.