Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. வாலிபருக்கு குவியும் பாராட்டுகள்….!!!

வீட்டின் தடுப்பு கம்பிகளின்  இடையே குழந்தை சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாராசுரம் பகுதியில் ஆனந்த்-கீர்த்திகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 1/2  வயதில் ஹரிப்பிரியன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று ஹரிப்பிரியன் வீட்டின் மேல் பகுதியில் உள்ள தடுப்பு கம்பிகள் அருகே நின்று விளையாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென ஹரிப்பிரியனின் தலை கம்பிகளின் இடையே சிக்கியது.

இதனை பார்த்த குழந்தையின் பெற்றோர்   கதறி அழுதுள்ளனர். இவர்களது சத்தம் கேட்டு வந்த ஜவஹர்  என்பவர் கம்பிகளின் இடையே   சிக்கிய ஹரிபிரியனின்  தலையை வெளியே எடுத்துள்ளார். அந்த வாலிபரை  பொது மக்கள் பாராட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |