வீட்டில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமி விளையாட்டு பொருளில் இருந்த பேட்டரியை முழுங்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள அயனாவரம் பி.ஈ.கோவில் வடக்கு மாடவீதி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதில் தனுஸ்ரீ என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனுஸ்ரீ வீட்டில் விளையாட்டு ஜாமான்களை வைத்து விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது விளையாட்டு பொருளில் இருந்த சிறிய பேட்டரியை சிறுமி வாயில் போட்டு முழுங்கியதாக தெரிகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணேசன் உடனடியாக மகளை மீட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். தற்போது தனுஸ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.