Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் 1வது வார்டு கல்வி அவென்யூ குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஆட்டோ டிரைவர் பார்த்திபன். இவரது மகன் பிரவீன் (6) ஆவார். இதில் பிரவீன் நேற்று மதியம் தன் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சுற்றித் திரிந்த ஒரு பன்றி பிரவீனின் கழுத்து, தோள்பட்டை, முதுகு பகுதிகளில் கடித்துக்குதறியது.

இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய அவனது சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பன்றியை விரட்டி விட்டதோடு, காயமடைந்த பிரவீனை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பிரவீனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து  வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் அண்ணாமலைநகர் பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகளை பேரூராட்சி நிர்வாகம் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |