தஞ்சையில் புதிதாக கட்டப்படும் வீட்டின் சுவரின் மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்த கதவு சட்டத்தை பிடித்து தொங்கி விளையாடிய 7 வயது சிறுமி, கதவு சட்டம் சாய்ந்து விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் சுண்ணாம்புகார பாரதிதாசன் தெருவில் ஸ்ரீதர் என்பவர் வசித்துவருகிறார். அவர் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். அதில் முகப்பு கதவை பொருத்துவதற்கான அறுகால் எனப்படும் கதவு சட்டம் வாங்கி சுவரின் மீது செங்குத்தாக சாய்த்து வைக்கப்பட்டிருந்தது.
அதனை பிடித்து தொங்கியவாறு ஸ்ரீதரின் 7 வயது மகள் ப்ரீத்தி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கதவு சட்டம் அப்படியே குழந்தை மீது சாய்ந்து தலையில் அடிபட்டு குழந்தை பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.