டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பெண் குழந்தை பலியான சம்பவம் சோழத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தாமரைப்பாக்கம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரிசி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு யாழினி(3) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் யாழினி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு எதிரே நின்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திமிரியில் இருந்து ஆரணி நோக்கி வேகமாக சென்ற டிராக்டர் சக்கரத்தில் சிக்கி யாழினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.