தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 1 1/2 வயதுடைய பெண் குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கள்ளிக்குப்பம் பெருமாள் கோவில் தெருவில் லாரி டிரைவரான அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் அருளின் 2-வது பெண் குழந்தையான 1 1/2 வயதுடைய ருத்ரா வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ருத்ரா தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துவிட்டாள்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ருத்ரா பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.