நெல் அறுவடை இயந்திரம் மோதியதால் பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அ.மேட்டூர் பகுதியில் சத்தியசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு வயதுடைய யாஷிகா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் யாஷிகா தனது வீட்டிற்கு முன்பு விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அதே ஊரில் வசிக்கும் ஆனந்த் என்பவர் வேகமாக ஓட்டி வந்த நெல் அறுவடை எந்திரம் குழந்தை மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.