தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டைபாளையம் பகுதியில் கொத்தனாரான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கனிஷ்கா, ஹரிஷ் என்ற இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் 2 வயதுடைய ஹரிஷ் வீட்டிற்கு வெளியே நின்று விளையாடி கொண்டிருந்தார். அப்போது குழந்தை எதிர்பாராதவிதமாக அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துவிட்டது.
இதனையடுத்து குழந்தையை தேடி அலைந்த பெற்றோர் தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஹரிஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.