Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சக்கரசம்பாளையம் பாரதி நகரில் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு உதய், சந்தோஷ் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 வயதுடைய சந்தோஷ் வீட்டிற்கு முன்பு விளையாடி கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் மகன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சந்தோஷை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர்.

அப்போது புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாய கூடம் அருகிலிருக்கும் 3 அடி ஆழமுடைய தரைமட்ட தண்ணீர் தொட்டியில் சந்தோஷ் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சந்தோஷை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |