மின்சாரம் தாக்கி 3 வயது ஆண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பி. என் பாளையம் புதூரில் கட்டிட மேஸ்திரியான சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய யோகேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பவித்ரா வேலை பார்க்கும் கோழிப்பண்ணையில் யோகேஷ் விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை மின் கம்பியை பிடித்துள்ளான்.
இதனால் மின்சாரம் தாக்கி யோகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.