விஷ காய்களை தின்ற 5 சிறுவர் சிறுமிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னதோப்பு பகுதியில் 3 சிறுவர்கள் மற்றும் 2 சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இந்த சிறுவர்கள் அருகில் கீழே கிடந்த விஷ காய்களை தின்றுள்ளனர்.
இதனால் அவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனை பார்த்த அவரது பெற்றோர் அவர்களை உடனடியாக மீட்டு தர்மபுரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.