Categories
கரூர் மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுமி… திடீரென நடந்த துயர சம்பவம்… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

சரக்கு வேன் மோதி சிறுமி உயரிழந்த வழக்கில் ஓட்டுநருக்கு 4 ஆயிரம் ரூபாய் அபதாரமும் ஓர் ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

கரூர் மாவட்டத்தில் உள்ள வை.புதூரில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 3 வயதில் நிஷா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த நிஷா மீது சரக்கு வேன் ஒன்று மோதியுள்ளது. இதில் நிஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து குறித்து குளித்தலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம் திருச்சி மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் வசித்து வரும் சேர்ந்த சரக்கு வேன் டிரைவரான நேருஜி என்பவருக்கு நான்காயிரம் ரூபாய் அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |