திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மெட்டூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 வயதுடைய யுகந்திகா என்ற மகளும், 3 வயதுடைய மகனும் இருந்துள்ளனர். இதில் யுகந்திகா அரசு பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று இரவு நேரத்தில் படுக்கை அறையில் விளையாடிக் கொண்டிருந்தபோது யுகந்திகா தனது கையில் இருந்த சால்வை துணியை சுற்றிக்கொண்டிருந்தார்.
இதனையடுத்து சால்வை துணியை ஜன்னல் கம்பியில் கட்டி விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சால்வை யுகந்திகாவின் கழுத்தை இறுக்கியத்தால் சிறுமி மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்களது மகளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.