விளையாடி கொண்டிருந்த சிறுமி கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவ்யஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி தனது வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்து விட்டார்.
இதனால் தண்ணீரில் மூழ்கி சிறுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.