Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விளையாடி கொண்டிருந்த சிறுவன்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

கட்டுபாட்டை இழந்து இருசக்கர வாகனம் சிறுவன் மீது மோதி படுகாயமடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் புதுக்கோவில் வில்லிவலசை பகுதியில் முத்துக்கருப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 வயதில் கவின் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுவன் வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதி வழியாக சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக கவின் மீது மோதியுள்ளது.

இதில் காயமடைந்த கவினை அங்கிருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர அளித்து வருகின்றனர். இதுகுறித்து சிறுவனின் தந்தை முத்துகருப்பன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தில் வந்து விபத்தை ஏற்படுத்திய சக்கரக்கோட்டை பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

Categories

Tech |