தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதுடைய கவிராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் தனது வீட்டிற்கு பின்னால் உள்ள பாப்பாங்குளம் அருகில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி சிறுவன் குளத்திற்குள் விழுந்துவிட்டார்.
இதனை அடுத்து சிறுவனை தேடி பார்த்த உறவினர்கள் குளக்கரையில் தண்ணீரில் மூழ்கி கிடந்த கவிராஜை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் கவிராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.