விளையாடி கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டு வசந்தகுமார் தனது நண்பர்களான சுரேஷ், சிவகுமார் ஆகியோருடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது மேலே சென்ற மின் வயரில் கை பட்டதால் விளையாடி கொண்டிருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு வசந்த குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.