சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் பாண்டி(44) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓசூர் சாந்தி நகரில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் வீட்டில் விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் ஓசூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் பாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.